IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அக்காவுக்கும்; தங்கைக்கும் ஒரே டெக்னிக்! பிளஸ்2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!

Get real time updates directly on you device, subscribe now.


பிள்ஸ்2 படித்துக் கொண்டிருக்கும் கொழுந்தியாவை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அவர் தனது மனைவியையும் இதேப்போலதான் பள்ளியில் படித்தபோது கர்ப்பமாக்கியது குறிப்பிடத் தக்கது.


சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, தாராபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது 22). கட்டிட தொழிலாளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் மணி கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவரை காதலித்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பின்னர் அந்த மாணவியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து அவரை திருமணம் செய்துள்ளார்.

திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கிய காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி


இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் தீவட்டிப் பட்டி போலீசில் புகார் செய்தனர். அதில், 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் தனது மகளை மணி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். அவரிடம் இருந்து மகளை மீட்டுத் தர வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தனர். புகாரை விசாரித்த போலீசார் மணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த மணி, தாலி கட்டி மனைவியாக்கிய மாணவியைத் தேடி வந்தார். பெற்றோர் சம்மதத்துடன் மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். அப்போது மணியின் வீட்டுக்கு மனைவியின் சகோதரி அடிக்கடி வந்துள்ளார். பிளஸ்2 படித்து வரும் அந்த பெண் மீதும் மணிக்கு ஆசை வந்தது. கொழுந்தியாவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று திட்டமிட்டு, அவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.


அக்காவை காதலித்தது போலவே தங்கச்சியையும் காதலித்துள்ளார். அக்காவுக்கு அளித்த உறுதிமொழி போலவே தங்கைக்கும் உறுதிமொழி அளித்து ஆசை வார்த்தை கூறியுள்ளார். அக்காள் கணவரான மாமாவை முழுமையாக நம்பிய அந்த மாணவியுடன் மணி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அவர் கர்ப்பமானார். கொழுந்தியாவை கர்ப்பமாக்கிய மணி, மாமனார் வீட்டுக்குச் சென்று அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியிருக்கிறார்.

மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்து ரசித்த கொலையாளிகள்


இதனால் அங்கு பெரும் சண்டை வெடித்துள்ளது. பின்னர் 5 மாத கர்ப்பிணியாக இருந்த கொழுந்தியாவை அழைத்துக் கொண்டு மணி தலைமறைவாகி விட்டார். ஏற்கனவே முதல் மகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டு, இரண்டாவது மகளையும் கர்ப்பமாக்கிய மணி மீது உறவினர்களுக்கு கோபம் வந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் தீவட்டிப்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர்.


போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொழுந்தியாளுடன் தப்பிச் சென்ற மணியை தேடினார்கள். அவர் மேட்டூரில் தங்கியிருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மணி 2வது முறையாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். மணியிடம் இருந்து மீட்கப் பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு பின் சேலம் அரசு காப்பகத்துக்கு அனுப்பப் பட்டார்.


வாலிபர் ஒருவர் அக்காவையும், தங்கையையும் ஒரே டெக்னிக்கில் காதலித்து, கர்ப்பமாக்கிய சம்பவம் சேலம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

#rape #pocsoact #student

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader