புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் – கொடைக்கானல்

Get real time updates directly on you device, subscribe now.

பெயர் : புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம் : பாக்கியபுரம், கொடைக்கானல்

 

மாவட்டம் : திண்டுக்கல்

மறைமாவட்டம் : மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம் : கொடைக்கானல்

 

நிலை : பங்குத்தளம்

வரலாறு :

******************

மலைகளின் இளவரசி என்ற சிறப்பு பெற்றதும், சிறந்த கோடைவாசஸ் தலமுமான கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள பாக்கியபுரம், நாயுடுபுரம், லூர்துபுரம், அட்டுவம்பட்டி, பள்ளங்கி  மற்றும் இவற்றை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக பாக்கியபுரம் பங்கு இருந்தது.

 

பாக்கியபுரத்தின் மேற்பகுதியில், 1948 ஆம் ஆண்டு முதல் தனிநபர் இருவரின் இடத்தில் சிறிய குருசடி ஒன்றை அமைத்து வழிபாடுகள் நடத்தி வந்துள்ளனர். 1952 ஆம் ஆண்டு முதல் சற்று பெரிதாக கூரையமைத்து அங்கு அனைவரும் ஒன்றுகூடி ஜெபித்தனர். சிறப்பு நாட்களில் திரு இருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து அருள்தந்தையர் வந்து திருப்பலி நிறைவேற்றி வந்துள்ளனர். ஆண்டிற்கு ஒருமுறை அன்னைக்கு சப்பரம் எடுத்து திருவிழா கொண்டாடுவது, அப்போ திருந் தேவழக்கத்திலிருந்தது.

 

மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், திருப்பலி நிறைவேற்ற போதுமான இடம் இல்லாததாலும், நாயுடுபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசன்டேசன் கான்வென்ட்ல் (Presentation Convent) அமைந்துள்ள தூய சவேரியார் பள்ளியில்  ஒவ்வொரு வாரமும் திருப்பலிகள் நடைபெற்றன.

 

1972 ஆம் ஆண்டு இப்பகுதி சங்கத்தினர், இறைமக்களின் பெரு முயற்சியால் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கி, 1985 ஆம் ஆண்டு வரை ஆலயப் பணிகள் நடந்து வந்தன. இக்காலத்தில் அனைத்து ஆன்மீகத் தேவைகளுக்காகவும், திருப்பலிக்காகவும் திரு இருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்தே அருள் பணியாளர்கள் வந்து சென்றனர்.

 

கிளைப்பங்காக இருந்த பாக்கியபுரம் 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கொடைக்கானல் வட்டத்தின் மூன்றாவது பங்குத்தளமாக செயல்படத் தொடங்கியது. திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் துணைப் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. வின்சென்ட் ராஜா அவர்கள் பாக்கியபுரம் பங்கின் முதல் பங்குத் தந்தையாக பொறுப்பேற்றார்.

 

1986 ஆம் ஆண்டு மார்ச் 5 ம் நாள் தனிப்பெரும்பங்காக பாக்கியபுரம், லூர்துபுரம், அட்டுவம்பட்டி, பள்ளங்கி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளையும் உள்ளடக்கியதாகவும், மொத்தம் 415 குடும்பங்களை உறுப்பினர்களாகவும் கொண்டுருந்தது. புதிய பங்காக தொடங்கிய காலம் முதல் பாக்கியபுரம் பங்கு அனைத்து நிலைகளிலும் விரைவாக வளர்ச்சியடைந்தது.

 

1993 ஆம் ஆண்டு பேராயர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இப்பகுதியில் செயல்பட்டு வந்த சங்கங்கள் கலைக்கப்பட்டு, அருள்பணி. அந்தோனிராஜ் அவர்களால் புதிதாக பங்குப்பேரவைஆரம்பிக்கப் பட்டது. இதனால் பங்கின் அனைத்துப் பகுதிகளில் இருந்து, உறுப்பினர்கள் பங்குப்பேரவையில் இடம் பெற்று, செயல்பாடுகளில் ஈடுபட ஏதுவாகமாறியது.

 

2002 ஆம் ஆண்டில்அருள்பணி. மரியலூயிஸ் அவர்கள் பொறுப்பேற்ற பின் ஆலயம் இருந்த இடத்தின் பின்புறம் 30″ 80″ அடி என்கிற அளவில் கான்கிரீட் மேற்கூரை அமைத்து ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

 

அருள்பணி. பால் இக்னேஷியஸ்பணிக்காலத்தில்

லூர்துபுரம், அட்டுவம்பட்டி, பள்ளங்கிபகுதிகள் 2007 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு, லூர்துபுரம்தனிப்பங்காகசெயல்படத் தொடங்கியது.

 

அருள்பணி. மரிய அருள் செல்வம் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, பங்கு மக்களின் அவசரத் தேவைகளுக்காக “ஜீவன் டிரஸ்ட்” ஆரம்பிக்கப்பட்டு, மக்களுக்கு சேவைபுரியஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டது.

 

அருள்பணி. அடைக்கலராஜாபணிக்காலத்தில் பங்கு அதிவேக வளர்ச்சி கண்டது. ஆலயகான்கிரீட் மேற்கூரை, புனித வளனார் அரங்கம், ஆலயமணி கோபுரம், ஜெபமாலை கொடிமரம், குழந்தை இயேசு சிற்றாலயம், குருசடிமெத்துவனத்துஅந்தோனியார்ஆலயவளாகத்தில்கெஸ்லர் அரங்கம், திருஇருதய ஆண்டவர் சிற்றாலயம், சகாயமாதாசிற்றாலயம், வழித்துணை மாதாகெபி, புனித தோமையார்சிற்றாலயம், புனித சலேத் அன்னை கெபி, சிலுவைப்பாதை வளாகம் (பெரும்பள்ளம்), புனித சகாயமாதாகெபி போன்ற வழிபாட்டு தலங்கள்கட்டப்பட்டுபங்கின் ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

 

01.01.2019 முதல் அருள்பணி. சேவியர் அருள் ராயன் அவர்கள் பங்குத்தந்தையாகபொறுப்பேற்று, பணியாற்றி வருகிறார். உலக மீட்பர்கெபியும், புனித ரோசாமிஸ்டிக்காகெபியும்உருவாக்கப்பட்டுள்ளன.

 

பாக்கியபுரம்பங்கில் தற்போது 3 மண்டலங்களும், 22 அன்பியங்களும், பங்குப் பேரவை மற்றும் பல்வேறு பங்கேற்புஅமைப்புகளும்சிறப்புற செயல்பட்டு வருகின்றன.

 

பங்கின்சிற்றாலயங்கள்:

 1. புனித வனத்துஅந்தோனியார்சிற்றாலயம், குருசடிமெத்து
 2. புனித பதுவைஅந்தோனியார்சிற்றாலயம், அண்ணா ராமசாமி நகர்
 3. அற்புத குழந்தை இயேசு சிற்றாலயம், ரைபிள்ரேஞ்ச் ரோடு
 4. 4. திருஇருதய ஆண்டவர் சிற்றாலயம், பாக்கியபுரம்
 5. புனித சகாயமாதாசிற்றாலயம், குருசாமி பள்ளம்
 6. புனித தோமையார்சிற்றாலயம், கல்லுக்குழி.

பங்கின்கெபிகள் :

 1. புனித வழித்துணை மாதாகெபி, கான்வென்ட் ரோடு
 2. புனித சலேத்மாதாகெபி, பாக்கியபுரம்
 3. புனித பரலோகமாதாகெபி, சேரன் நகர்
 4. புனித ஜெபமாலைமாதாகெபி, சேரன் நகர்
 5. புனித ஆரோக்கியமாதாகெபி, பியர்சோலா
 6. சிலுவைப்பாதை வளாகம், பெரும்பள்ளம்.

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader