IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டிக் டாக் மூலம் கொரனோவை பரப்பிய பெண் உட்பட 3 பேர் பணிநீக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

கொரனோ பாதித்த பெண்ணின் டிக் டாக் செய்த செல்போனை பயன்படுத்திய 3 மருத்துவ தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அந்த 3 பேரையும் கொரனோ வார்டில் தனிமைப்படுத்தி உள்ளனர்.

கடந்த 20ம் தேதி அரியலூர் அரசு மருத்துவமனையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அப்பெண் கொரோனா வார்டில் தனிமைப் படுத்தப்பட்டு இருந்த போது அவரது செல்போனில் டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளார். அப்போது அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவரின் செல்போனை வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேரையும் அதிகாரிகள் பணிநீக்கம் செய்துள்ளனர். மேலும் கொரனோ பாதிக்கபட்ட பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் அந்த 3 பேரையும் கொரனோ வார்டில் தனிமைப்படுத்தி உள்ளனர்.

கொரனோ வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் டிக்டாக் பதிவிட்டுள்ளதும் அதை பயன்படுத்திய 3பேரை பணிநீக்கம் செய்துள்ளதும் அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader