அரவிந்த் கண் மருத்துவமனை

Get real time updates directly on you device, subscribe now.

அரவிந்த் கண் மருத்துவமனை (Aravind Eye Hospitals) அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற ஜி. வெங்கடசாமி என்பவரால் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் சுமார் 11 படுக்கை வசதிகளுடன் 1976ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனை நன்கு வளர்ச்சியடைந்து தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், புதுச்சேரி போன்ற ஊர்களிலும் கிளைகளை அமைத்துக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல ஊர்களில் இலவசக் கண் சிகிச்சைக்கான கண் புரை நோய் மருத்துவ முகாமை நடத்தி கண்பார்வைக் குறைபாடு உடையவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறது. மேலும் இந்த மருத்துவமனை 2012ம் வருட கணக்கின்படி, 32 மில்லியன் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளது.

சுமார் 4 மில்லியன் பேருக்கு கண் அறுவை சிகிச்சை அளித்து நலம் பெறச் செய்துள்ளது. அரவிந்த் கண் பராமரிப்பு மருத்துவமனைகளின் கண் அறுவை சிகிச்சை முறை பாராட்டப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் ஏராளமான வழக்கு ஆய்வுகளுக்கு ஒரு மாதிரியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Aravind Eye Hospital Contact Details
Customer Enquiry Number: (0452) 4356100
Fax: +91-452-253 0984
E-mail Id: [email protected]

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader