IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆப்பிள் ஐபோனின் அட்டகாசமான சிறப்பம்சங்கள் வெளியீடு

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் முழுவதும் உள்ள ஐபோன் பிரியர்களுக்காக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் – 12 சீரிஸ் போன்கள் மற்றும் அதன் துணை சாதனங்கள், ஆடியோ சாதனம் என பலவற்றை அறிமுகம் செய்துள்ளது.

ஐபோன் – 12

ஐபோன் – 12 சீரிஸ் போன்களை பொறுத்தவரை, ஐபோன் – 12 மினி, ஐபோன் – 12, ஐபோன் – 12 புரோ, ஐபோன் – 12 புரோ மேக்ஸ் ஆகிய போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் – 12 மினி, இந்த வரிசையில் சிறிதாகவும், சகாய விலையிலும் வந்திருக்கும் மாடலாகும். ஐபோன் – 12, இதற்கு முன் வந்த, ஐபோன் – 11 மாடலின் தொடர்ச்சியாகும்.

இதேபோல், ஐபோன் – 12 புரோ மற்றும் ஐபோன் – 12 புரோ மேக்ஸ் ஆகியவை, ஐபோன் – 11 புரோ மற்றும் ஐபோன் – 11 புரோ மேக்ஸ் ஆகியவற்றின் நீட்சியாகும். இந்த ஐபோன் – 12 மாடல் போன்கள் அனைத்தும், ‘5ஜி’ தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் வகையில் வந்துள்ளன. ஐ.ஓ.எஸ்., 14 இயங்குதளத்தில் செயல்படும் இவை, ஆப்பிளின் ஏ14 பயோனிக் சிப் கொண்டவை.

விலை: ஐபோன் – 12 மினி: 69,900 ரூபாயில் துவங்குகிறது. ஐபோன் – 12: 79,900 ரூபாயில் துவங்குகிறது. மற்றும் ஐபோன் – 12 புரோ: 1,29,990 ரூபாயில் துவங்குகிறது. ஐபோன் -12 புரோ மேக்ஸ்: 1,29,900 ரூபாயில் துவங்குகிறது.

Genuine Indian Payment Gateway

ஹோம்பாடு மினி

இது, ஆப்பிளின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கராகும். 2017ல் முதன் முதலாக அறிமுகம் ஆன, ஹோம்பாடு சாதனத்தின் சிறிய மாடலாகும் இது. ஹோம்பாடு உடன் ஒப்பிடும்போது, இது அளவில் பாதியே இருக்கிறது. இதன் மேற்பகுதியில் தொடுதிரை வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

விலை: 9,900 ரூபாய்

சிலிகான் உறை

ஆப்பிள் எட்டு வண்ணங்களில், சிலிகான் உறைகள் மற்றும் கிளியர் பிளாஸ்டிக் உறைகள் ஆகியவற்றையும் அறிமுகம் செய்திருக்கிறது. நவம்பர், 6ம் தேதியிலிருந்து விற்பனைக்கு வரும், தோல் உறையின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதன் விற்பனை விலை: 4,900 ரூபாய்

மேக்சேப் சார்ஜர்

ஆப்பிள் நிறுவனம், மேக்சேப் சார்ஜர் மற்றும் மேக்சேப் டுயோ போல்டபிள் சார்ஜர் என, இரு ஒயர்லெஸ் சார்ஜர்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் டுயோ, ஆப்பிள் போன் மற்றும் ஆப்பிள் வாட்ச் இரண்டுக்குமானது ஆகும்.

வயர்லெஸ் சார்ஜரை பொறுத்தவரை, இது ஆப்பிளின் முதல் முயற்சியல்ல. ஏற்கனவே 2017ல் எடுக்கப்பட்ட ஒன்று தான். இருப்பினும் மேக்சேப் சார்ஜரை சரியாகப் பயன்படுத்த உதவும் வகையில், ஆப்பிள் 12 சீரிஸ் போன்களின் பின்பகுதியில் காந்தம் உள்ளது. ஆப்பிள் மேக்சேப் டுயோவைப் பொறுத்தவரை விலை உள்ளிட்ட மற்ற விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் விலை: 4,500 ரூபாய் மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#applei12 #iphone12 #i12features #in4net

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader