IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கலாமின் கனவுகளை நனவாக்க 50 மாணவர்களின் முயற்சியில் நானோ செயற்கைகோள்! – டிஜிட்ஆல் சங்கமம் கருத்தரங்கில் கலாமின் நண்பர் தகவல்

0 48

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்த டிஜிட்ஆல் சங்கமம் 2019 என்ற பெயரில் டிஜிட்டல் மாநாடு இன்று மதுரை தமிழ்நாடு சேம்பர் பவுன்டேஷனில் நடந்து வருகிறது. அதில் சிறப்பு விருந்தினராக அப்துல் கலாமின் நெருங்கிய நண்பர் டாக்டர்.விஜயராகவன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் எனக்கு கற்றுக்கொடுத்த ஒவ்வொரு வார்த்தைகளும் ஆசான் அப்துல் கலாமிடமிருந்து கற்றுக் கொண்டவை. நிறைய மேடைகளில் அப்துல் கலாம் குழைந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பார். அவரும் நிறைய குழந்தைகளுக்கு Confluence Technology பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

இன்றைய நடைமுறையில் செய்து கொண்டிருக்கும் 80 சதவீத வேலைகள் வருகின்ற 2030ம் ஆண்டில் செய்யும் வகையில் இருக்காது. ஏனெனில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) அபார வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. கலாமின் மிகப்பெரிய ஆசையாக உலகில் உள்ள அனைத்து குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டும் என்பதும் அதற்கான தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்பார். நானும் அப்துல் கலாமிடம் கண்டிப்பாக செய்வோம் என்பேன்.

அப்துல்கலாமை உலகில் 2 முறை விண்வெளி விஞ்ஞானி என்று கௌரவித்துள்ளார்கள். அதனால் நீங்கள் சொன்னால் குழந்தைகள் கண்டிப்பாக கேட்பார்கள் என்றேன். கலாமும் கண்டிப்பாக செய்வோம் என்பார். ஆனால் 2015 ஜுலை 25 அப்துல் கலாம் நம்மை விட்டு பிரிந்து விண்ணுலகம் சென்றுவிட்டார்.

அப்துல் கலாமின் கனவுகள், ஆசைகள் எண்ணங்களை நிறைவேற்ற 2016 ஜுலையில் தேசிய அளவிலான ஒரு போட்டியில் 10 அணியில் கலந்து கொள்ள வைத்தனர். ஒவ்வொரு அணிக்கும் 5 மாணவர்கள் 1 ஆசிரியர்கள் என தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இந்த அணிகள் மைசூர், சேலம், தஞ்சாவூர், ஓசூர் என எல்லா ஊர்களிலும் தொடங்கினர். போட்டியில் கலந்து கொண்ட 50 மாணவர்களையும் 2015 அக்டோபரில் வரவழைத்து கௌரவித்தோம். அதுபோல இஸ்ரோ விஞ்ஞானி தலைவரையும் வரவழைத்தோம். அவரும் குழந்தைகளுக்கு பெரிய அளவில் தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்தார்கள்.

18 செ.மீ அளவில் ஒரு நானோ செயற்கைக்கோளை உருவாக்கினார்கள். நாங்கள் நினைத்தபடி அனைத்தும் சரியாக செயல்பட்டால் 2020ல் அந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்படும். இதன் மூலம் 16 நாடுகள் உலகம் முழுவதும் சுற்றி வரமுடியும். இந்த 50 மாணவர்கள் செய்கின்ற விஷயம் உலகிலுள்ள 50 கோடி மாணவர்கள் பயன்பெறுவதற்கு அமையும்.

2015 அக்டோபர் 15ல் 3000 மாணவர்கள் மத்தியில் கலாம் நூலகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. உலகளவில் உள்ள 700 கோடி மக்களும் அனைத்து https://kalamlibrary.org என்ற இணையம் வாயிலாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உலகில் உள்ள எல்லா மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அப்துல் கலாம் பெயரில் தொடங்கிய அறிவு நூலகம் (Knowledge Library) தினம்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கும் அறிவுக் களஞ்சியமாகும். உலகில் இருக்கக்கூடிய விஞ்ஞானிகள், அறிஞர்கள் அனைவரும் தங்கள் தொழில்நுட்பங்களை கலாம் நூலகத்தின் மூலம் கற்றுக் கொடுக்கலாம் என்றார். அதுபோன்று டிஜிட்ஆல் அமைப்பு மூலம் தயாரிக்கின்ற தகவல் நுட்பங்களும் கலாம் நூலகத்திற்கு வழங்கலாம் எனவம் கேட்டுக் கொண்டார்.

Black Hole பற்றி முதல் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட புரிந்து கொள்ளும் தன்மை வளர்ந்துள்ளது. எனவே அப்துல் கலாமின் விருப்பத்தை நிறைவேற்றுவது போல் அந்த குழந்தைகளுக்கு கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக உலகில் சாதித்து காட்டுவார்கள் என்று விஜயராகவன் தெரிவித்தார்.

எண்ணத்திலே நல்லொழுக்கம் இருந்தால் நடத்தையிலே அழகு மிளிரும்
நடத்தையிலே அழகு மிளிர்ந்தால் குடும்பத்திலே சாந்தி நிலவும்.
குடும்பத்திலே சாந்தி மிளிர்ந்தால் நாட்டிலே சீர்முறை மிளிரும்
நாட்டில் சீர்முறை மிளிர்ந்தால் உலகத்தில் அமைதி நிலவும்.

மனத்தூய்மை அவசியம் என்று அப்துல் கலாம் வார்த்தைகளை விஜயராகவனும் கூறி முடித்தார்.

டிஜிட்ஆல் அமைப்பு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 18ம்தேதி டிஜிட்ஆல் (DIGIT ALL)அமைப்பை தொடங்கி வைத்தார். இந்த அமைப்பு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசனால் நடத்தப்பட்டு வருகிறது.
#DigitallSangamam2019 #APJAbdulKalam #NanoSatellite #In4Net