IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்திய வர்த்தகத்தில் தடையை மீறி ஆதிக்கம் செலுத்தும் பிட்காயின்!

11

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய ரிசர்வ் வங்கியானது, ‘பிட்காயின்’ என்கின்ற நாணயத்தை தடை செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பினை தொடர்ந்து, ‘பிட்காயின்’ நாணய பரிவர்த்தனை மையங்களின் சார்பில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

‘பிட்காயின்’ நாணய மாற்ற சந்தைகளின் சார்பில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ‘பிட்காயின்’ நாணய மற்ற சந்தைகளுக்கு, இந்திய வங்கிகள் வழங்கி வந்த சேவைகளை மட்டும் தான் இந்திய ரிசர்வ் வங்கியானது தடை செய்திருப்பதாக சுட்டிக்காட்டியது.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர், ‘பிட்காயின்’ நாணய பரிமாற்ற மையங்கள், சட்டவிரோத பணப்பரிமாற்றங்களுக்கும், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்திற்கு உட்பட்டும், தீவிரவாத செயல்களுக்கான நிதி ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் இந்தியாவில் ‘பிட்காயின் ‘ பரிமாற்றங்களை தடுத்திட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் வாதாடினார்.

உச்சநீதிமன்ற நீதிபதி 2017-ம் ஆண்டு முதல் ‘பிட்காயின்’ மதிப்பானது, சர்வதேச அளவில் உயர்ந்து வந்ததை குறிப்பிட்டு காட்டினார். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு காரணமாக மட்டுமல்லாமல், உலக அளவிலும் ‘பிட்காயின்’ என்கின்ற கிரிப்டோ நாணயங்களின் மதிப்பானது குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் அடிப்படையில், ‘பிட்காயின் ‘ நாணய பரிமாற்றங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில், இந்திய வங்கிகள் வழங்கி வந்த சேவைகள் மட்டும் தற்போது இந்தியாவில் நிறுத்தப்பட்டு இருக்கின்றது என்றும், இதற்கு முந்தைய இணையம் மற்றும் அலைபேசிகள் சங்கத்தின் சார்பில் வழக்காடிய ஆஷிம் சூத், மத்திய சேவை மற்றும் சரக்கு வரியானது, ‘பிட்காயின்’பரிமாற்றங்களை தடுத்திடவில்லை என்றும் வாதிட்டார்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தங்களது தீர்ப்பில், பரிவர்த்தனை கனிணி என்கின்ற [பிளாக்செயின்] மதிப்பிற்கு, ‘பிட்காயின்’ பரிவர்த்தனையில் மூலமாக நல்ல நிலையில் லாபமானது பெற்று வருகின்ற காரணத்தால், ‘பிட்காயின்’ பரிமாற்றத்தை அனுமதிப்பதாக கூறி, இந்திய ரிசர்வ் வாங்கி விதித்து இருந்த, ‘பிட்காயின்’ மீதான தடையினை நீக்கி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More