IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பொது இடத்தில் கோபப்பட்ட அனுஷ்கா – வீடியோவை வெளியிட்ட கோலி

16

தனது மனைவி அனுஷ்கா சர்மா கோபத்துடன் பேசும் வீடியோவை கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் மிக வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

ஏற்கெனவே பல்வேறு துறையிலிருந்து பிரபலங்களை தேர்ந்தெடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர்களாக மத்திய அரசு நியமித்தது.

 

இதனிடையே, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆடி காரில் சென்ற ஒருவர் பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசி சென்றிருக்கிறார்.

 

அந்த செயலை பார்த்த விராட் கோலியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, “ஏன் குப்பையை சாலையில் வீசுகிறீர்கள்? ஏன் பிளாஸ்டிக்கை சாலையில் வீசுகிறீர்கள்?. இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

 

தயவுசெய்து குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுங்கள்” என்று சொகுசு காரில் சென்றவர்களிடம் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த வீடியோவை பகிர்ந்து விராட் கோலியும் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

 

அதில், “குப்பைகளை சாலையில் போட்டுவிட்டு அதை இழுத்துச் சென்றுள்ளனர். பெரிய ஆடம்பரக் கார்களில் செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இதுபோன்ற செயல்களில் பெரிய கவனமில்லை.

 

இவர்களால் எப்படி நாடு தூய்மையடையும்?. இதுபோன்ற தவறான செயல்களை நீங்கள் பார்த்தால் அனுஷ்கா சர்மா செய்தது போல் அவர்களிடம் தூய்மையை அறிவுறுத்துங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கோலி கூறியுள்ளார்.