தோல்வியைக் கண்டு பார்முலாவை மாற்றிய முன்னணி நடிகைகள்!

Get real time updates directly on you device, subscribe now.

தென்னிந்திய திரைப்படங்களில் கடந்த சில வருடங்களில் நாயகிகளை மையப்படுத்தி சில திரைப்படங்கள் வெளியாகின. அவற்றில் சில படங்கள் வெற்றி பெற்றும் ஒரு சில படங்கள் தோல்வியையும் கண்டன.

நாயகிகளை மையப்படுத்தி வெளியான படங்களில் அதிகம் நடித்தவர் நடிகை நயன்தாரா. அவரைத் தொடர்ந்து சமந்தா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் மற்றும் டாப்ஸி ஆகியோரும் நாயகியரை முன்னணிப் படுத்திய படங்களில் நடித்து வந்தனர்.

ஆனால் கீர்த்தி சுரேஷ் நடித்து இந்த வருடம் ஓடிடி தளங்களில் வெளியான தமிழ்ப் படமான பெண்குயின் மற்றும் தெலுங்குப் படமான மிஸ் இந்தியா ஆகிய படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. இதனால் இனிமேல் இப்படியான படங்களில் நடிக்கப்போவதில்லை என கீர்த்தி சுரேஷ் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

தற்போது அவரது வழியில் அனுஷ்கா மற்றும் சமந்தா அப்படியான படங்களில் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளார்களாம். ஒரு தோல்வி வந்தாலும் தங்களது திரையுலக வாழ்க்கை பாதித்து விடும். அதனால் சில காலத்திற்கு இனிமேல் அப்படி நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More