தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறவிப்பு! பள்ளி, கல்லூரி மற்றும் திரையரங்குகள் திறக்கப்படுமா..?

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் அடுத்தகட்ட ஊரடங்கு அறிவிப்பு இன்று (31-10-2020) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்டோபர் மாதத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் கூடிய புதிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

புதிய அறிவிப்பில், 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை, கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் படிப்படியாக திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தாலும், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை புறநகர் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#coronalockdown #december lockdown tamilnadu #in4net

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More