IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

டிடிவி தினகரனுக்கு அரசியல் நடத்தவே தெரியாது – புகழேந்தி

109

அமமுக அதிருப்தியாளர்களின் தஞசை மண்டல ஆலோசணை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெங்களூரு புகழேந்தியும் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்து அவர் பேசும்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளிநாடு சுற்றுபயணம் முடிந்து தமிழகம் திரும்பியவுடன், முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான ஒன்றிய செயலாளர்கள், அமமுக தொண்டர்களுடன் அதிமுகவில் இணைய உள்ளோம்.

தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகதான் 80 சதவீத இடங்களில் வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலுக்கு பின் டிடிவி தினகரனின் தேர்தல் அத்தியாயம் முடிந்துவிடும். தினகரனுக்கு அரசியல் நடத்தவே தெரியாது. அவரை நாங்கள் தலைவராக இவ்வளவு நாள் ஏற்றுக் கொண்டதற்கு வருந்துகிறோம்.

அமமுக கட்சி தொடங்க துணை நின்றவர்களில் நானும் ஒருவன் என புகழேந்தி தெரிவித்தார். இன்று முதல் அமமுக கலைக்கப்படுகிறது. இதுகுறித்து நான் தேர்தல் ஆணையத்திற்கு கடந்த மாதம் 23ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளேன். இனி அமமுக பெயரை எவராவது உபயோகப்படுத்தினால் கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சசிகலா சிறைவாழ்க்கை முடிந்து திரும்பியதும் அவர் அதிமுகவில் இணைவது அவரது விருப்பம் என்று புகழேந்தி கூறினார்.