தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே! தமிழில் அமித்ஷா டுவிட்

Get real time updates directly on you device, subscribe now.

2நாள் அரசுமுறை பயணமாக சென்னை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது எம்.ஆர்.சி நகரில் இருக்கும் லீலா பேலஸில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அமித்ஷாவை அதிமுக மற்றும் பாஜகவினர் ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் சாலை மார்க்கம் வழியாக லீலா பேலஸுக்கு புறப்பட்டு சென்ற அவர், வழியில் காரை நிறுத்தி கீழே இறங்கி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கத்தை தெரிவித்தார்.

ஆனால் ஒருபுறம் நடைபெற அமித்ஷாவிற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் #gobackamitshah என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அங்கு சாலையின் ஓரத்தில் நின்ற ஒருவர், அமித்ஷா நடந்து சென்ற போது பதாகை ஒன்றை வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அமித்ஷா சென்னை வருகை குறித்து டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, “சென்னை வந்தடைந்தேன்! தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்!” என தமிழில் பதிவிட்டுள்ளார்.

மேலும், உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

#தமிழகம்_வரவேற்கிறது  #TNWelcomesAmithShah #AmitShah #justin  #breakingnews

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More