IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மருத்துவர்களின் வீட்டை காலி செய்ய வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை – களத்தில் இறங்கிய அமித் ஷா

219

மருத்துவத் துறை ஊழியர்களை வீடு காலி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரவு, பகல் பாராமல் மருத்துவ துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதி வந்துள்ளது.

அதில் வாடகை வீட்டில் குடியிருக்கும் மருத்துவ ஊழியர்கள், மருத்துவர்கள் , செவிலியர்கள் பலரும் மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் மூலமாக கொரோனா பரவும் என்ற பீதியின் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் காலி செய்யச் சொல்லி கட்டாயப் படுத்துகின்றனர். பலர் இந்த கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டு வீடுகளை காலி செய்துவிட்டனர்.

Related Posts
1 of 2

பல மருத்துவர்கள் வீடின்றி நடுரோட்டில் நிற்கின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இந் நிலையில் வீடு காலி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உள்துறை அமித் ஷா, டெல்லி மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்தினரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்களை வீடுகளிலிருந்து காலி செய்ய வற்புறுத்தும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை, மாவட்ட ஆட்சியர்களுக்கு டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.