IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அமித் ஷா ஒரு அருமையான ராஜதந்திரவாதி – சொல்கிறார் ரஜினிகாந்த்

19


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு அருமையான ராஜதந்திரவாதி என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


காஷ்மீர் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு அருமையான ராஜதந்திரம் செய்து காஷ்மீரூக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார். இந்த விஷயத்தை பாராட்ட வேண்டுமே தவிர அதை அரசியலாக்க கூடாது. இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்று ரஜினிகாந்த் கூறினார்.


சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் அவரது வீட்டின் முன்பு ரஜினிகாந்த் பேசும்போது, காஷ்மீர் விவகாரத்தை ராஜதந்திரத்தோடு செயல்படுத்தி முடித்துள்ளனர். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை நான் கிருஷ்ணர், அர்ஜுனன் என்று கூறியதற்கு, ஒருவர் திட்டமிடுகிறார். மற்றொருவர் அதை செயல்படுத்தி முடிக்கிறார் என்ற அர்த்ததோடு தான் கூறினேன்.


காஷ்மீர் விவகாரம் எவ்வளவு பெரிய விஷயம். அது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக திகழ்ந்தது. தற்போது இந்த விஷயத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, பின்பு ராஜ்யசபா, லோக்சபா தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெற்றுள்ளனர். இது ஒரு அருமையான இராஜதந்திரம் என்றார்.


மதிப்பிற்குரிய சில அரசியல்வாதிகள் எதை அரசியலாக்க வேண்டும். எதை அரசியலாக்க கூடாது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். என் கட்சி துவக்கம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.