IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்தியாவை நேசிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்

Get real time updates directly on you device, subscribe now.

அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை நேசிப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்தை ஒட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிபர் டிரம்ப் அவரது மனைவி மெலானியாவுடன் கலந்து கொண்டார். படை வீரர்கள் மற்றும் சேவை அமைப்புகளை கவுரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவில், விமானங்கள் வானில் அணிவகுந்து மரியாதை செலுத்தின.

இரவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கண்ணைக் கவரும் வகையிலான பட்டாசுகளை வெடித்து சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி உலகின் பல தலைவர்களும் அமெரிக்காவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில், அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக சுதந்திரத்தையும், மனித வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும், அதையே இந்நாள் கொண்டாடப் படுவதாகவும் பதிவிட்டார். இதற்கு பதிலளித்த டிரம்ப், நன்றி நண்பரே, இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது,’ என பதிவிட்டார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader