IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அமெரிக்க ராணுவம் பென்டகன் மீது அமேசான் வழக்கு

99


டிஜிட்டல் மையமாக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ராணுவம் மீது அமேசான் வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் தலைமையகம் ஆக பென்டகனை டிஜிட்டல் மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 71 ஆயிரம் கோடி) ஒப்பந்தம் விடப்பட்டது. இ்நத ஒப்பந்தத்தை பெற அமெரிக்க பிரபல பன்னாட்டு நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் விருப்பம் தெரிவித்தது.

இந்த ஒப்பந்தம் அமேசானுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென ஒப்பந்தம் மைக்ரோசாப்டுக்கு பென்டகன் வழங்கியது, இது அமேசான் நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக பென்டகன் மீது அமேசான் குற்றம் சாட்டியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பென்டகன் மீது வாஷிங்டன் கோர்ட்டில் அமேசான் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பான அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டுரூ கூறுகையில், மதிப்பீட்டு செயல்முறையின் பல அம்சங்களில் குறைபாடுகள், பிழைகள் மற்றும் தெளிவற்ற சார்பு ஆகியவை உள்ளன. இந்த விஷயங்களை ஆராய்ந்து சரிசெய்ய வேண்டியது அவசியம்” என்றார்.

இதற்கிடையே அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஒப்பந்த ஒதுக்கீடு நடந்துள்ளதாகவும், நீதிதுறையுடன் சேர்ந்து, இந்த வழக்கை ஆய்வு செய்வோம் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கு தேவையான அனைத்து விதிமுறைகளையும் மைக்ரோசாப்ட் முழுமையாக பூர்த்தி செய்திருப்பது உரிய ஆய்வுக்கு பின் உறுதி செய்யப்பட்ட பின்னரே வழங்கப்பட்டுள்ளது என்பதை விசாரணை வெளிக்கொண்டு வரும் என மைக்ரோசாப்ட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.