IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அப்படி என்ன பாதம் பருப்பில் விசேஷம் இருக்கு?

0 75

அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் நேரம் இது. மகாலட்சுமியை வரவழைக்கும் புதிய விழா. வண்ணமயமான கோலங்கள், வானவேடிக்கைகள், புத்தாடைகள், பட்டாசுகள் என குடும்பங்கள் மட்டுமல்ல, நாடே ஒன்றாகி கொண்டாடுகின்றன. அன்பையும் இனிப்பையும் மட்டுமல்ல, பரிசுகளையும் பரிமாறிக் கொள்ளும் இந்த பண்டிகை காலத்தில் ஆரோக்கியமான பரிசாக பாதாம் பரிசளிப்போம்.

பாதாம்பருப்பில் உடல் நலத்துக்கு ஏற்ற 15 வகையான நுாண்ணுாட்டச்சத்ததுக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் இ, நார்ச்சத்து, புரோட்டின், ரிபோபிளவின், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை, இருதய நோயை தடுக்க உதவுகின்றன. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகின்றன. இதுவே இருதய நோயை தவிர்க்க உதவுகிறது.

பாதம் பருப்பை சமையலில், இனிப்பு தயாரிப்பில், உணவில் எங்கு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். நண்பர்களுடனும் உறிவினர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். நீண்ட ஆயுளையும், உடல் நலத்தையும் தரும். பசியின்போதும், விரதங்களை மேற்கொள்ளும்போதும் தேவையான சக்தியை பாதம் தருகிறது. வயிறு நிறைந்த அனுபவத்தை தருகிறது.

பாலிவுட் நடிகை ஷோக அலிகான் கூறுகையில், ‘ஒரு தாயாகவும், குழந்தைகளின் நலன் விரும்பும் பெண்ணாகவும் நான் உங்களுக்கு கூறுவதெல்லாம், பாதம் பருப்பில் அனைத்து சிற்றுண்டிகளையும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுங்கள். குடும்பத்தினர் அனைவருக்கும் ஆரோக்கியத்தை தரும்,’’ என்றார்.

மேக்ஸ் ஹெல்த்கேர் அமைப்பின் மண்டல தலைமை உணவு நிபுணர் ரித்திகா சமந்தர் கூறுகையில், ‘‘ பாதம் பரிசளிப்பது ஒரு மிகவும் ஆரோக்கியமான வழி. சிறந்த வழியும் கூட. நீண்ட நாட்கள் கெடாமல் பாதுப்பாக இருப்பதோடு, சுவையான முறையிலும் பதப்படுத்திக் கொள்ளலாம்,’’ என்றார்.

பாதம் பருப்புகள் ஒரு சுவையான கொட்டை வகையை சேர்ந்தது. குழந்தைகளுக்கு மாலைநேரங்களில் உணவாக அளிக்கலாம். மொறுமொறுவென வறுத்து, அளிக்கலாம்.

நுண்ணுாட்டச்சத்து மற்றும் உடல் நல ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி கூறுகையில், ‘‘ இந்தியாவின் ஒரு பாரம்பரியமிக்க உணவாக பாதம் இருந்து வருகிறது. எளிதாக மசாலா, உப்பு, இனிப்பு என பல வகையிலும் பண்டிகைக்கு எளிதாக தயாரிக்க முடியும்,’’ என்றார்.

எனவே பாரம்பரிய விழாவில் பாதமையும் சேர்த்து உடல் நலமும் ஆரோக்கியமும், செல்வமும் சேர கொண்டாடுவோம்.