IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி வழங்கியது மத்திய அரசு!

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா ஊரடங்கினால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆன்லை வர்த்தகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் உணவுப்பொருள் விற்பனைக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதியளித்தது. பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சில தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு, உணவுப் பொருட்கள், மருந்து, மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.

அதன்பின்னர் செல்போன், டிவி மற்றும் பிரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்கள் மற்றும் ஆடைகளையும் விற்பனை செய்து கொள்ள அனுமதி தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்ட பொருட்களுக்கான ஆர்டர்களை ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களிடம் பெறத் தொடங்கின.

இந்நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் அனைத்து வகை பொருட்களையும் விற்பனை செய்து கொள்ள ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனாவல் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் பின்பற்றி விற்பனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய மத்திய அரசு, ஆன்லைன் விற்பனை விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகளின் முடிவே இறுதியானது எனவும் தெரிவித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader