IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

2022க்குள் அனைத்து ரயில் தடங்களும் மின் மயமாக்கப்படும் – தென்னக ரயில்வே பொது மேலாளர்

88

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்,தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாரத பிரதமரின் தொலை நோக்கு திட்டத்தால் விருதுநகர்- கொல்லம் உட்பட நாட்டின் அனைத்து ரயில் தடங்களும் 2022க்குள் மின் மயமாக்கப்படும். ரயில் பயணிகளின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். சென்னை முதல் கொல்லம் வரை சுற்றுலா ரயில் இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

ஆலங்குளம் வழியாக நெல்லைக்கு புதிய ரயில் பாதைக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்கும் பட்சத்தில் அதற்கான பணிகள் துவங்க தயாராக உள்ளோம். பல்வேறு ரயில்வே பணிகளுக்காக இந்தியா முழுவதிலும் இடம் கையப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது என்றார்.
#SouthernRailway #Manager #2022 #In4Net