IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இரவு முழுவதும் திருவிழா கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க கோரி தீர்மானம்

48

இரவு முழுவதும் கோயில் திருவிழா கலைநிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் திடலில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அனைத்து சமுதாய பாரம்பரியம் காக்கும் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தெட்சண மாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை வகித்தார். ஜெயச்சந்திரன், திருமலைகுமாரசாமி, கருத்தப்பாண்டிநாடார், தமிழ்மணி, நாராயணசிங்கம், பாலசுப்பிரமணியன், கருணாகரன், சண்முகசுந்தரம், தங்கவேல்செட்டியார் முன்னிலை வகித்தனர். சரவணன் வரவேற்றார். சாக்ரடீஸ் தொகுப்புரை ஆற்றினார். எஸ்.கே.டி.பி.காமராஜ், கே.ஆர்.பால்துரை, தெட்சண மாறநாடார் சங்கம் கணேசநாடார், சேம்பர் செல்வராஜ் மற்றும் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் பேசினர்.

கூட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பகுதிகளில் வாழும் அனைத்து சமுதாய மக்களும் தங்களது அடிப்படை உரிமையான பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு காப்பதற்கு காலகாலமாக, தலைமுறை, தலைமுறையாக நடைபெற்று வரும் கோயில் கொடை விழாக்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் போன்றவையை முன் காலங்களில் நடைபெற்றது போன்று இரவு 10 மணிக்கு மேல் இரவு முழுவதும் நடைபெறுவதற்கு, அரசும், அரசு நிர்வாகமும், நீதித்துறையும் அதற்கான அனுமதியை வழங்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் பிச்சையா நன்றி கூறினார்.

இதில் தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.