10.1 C
Munich
Monday, October 3, 2022

அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைப்பு

Must read

அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைப்பு

இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பத்மஜா
சுந்துரு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டது. அலகாபாத் வங்கியின் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளில் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும், இந்தியன் வங்கியின் சர்வருடன் இணைக்கும் பணி கடந்த ஓராண்டாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. கரோனா ஊரடங்கு சமயத்திலும்கூட பல்வேறு சவால்களை சந்தித்து இப்பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைந்த வங்கிச் சேவையை வழங்குவதற்காக, இரு வங்கிகளின் சர்வர்களை இணைக்கும் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து, தற்போது தடையில்லா சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு காரணமாக, இரு வங்கிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்கு எண் (அக்கவுண்ட் நம்பர்), இன்டர்நெட், மொபைல் வங்கி சேவைகளுக்கான உள்ளீட்டு தகவல்கள் (லாகின்) மாறாது. அத்துடன், அலகாபாத் வங்கியின் வாடிக்கையாளர்கள் இந்தியன் வங்கியின் இந்த்ஒயாசிஸ் என்ற செயலிக்கு மாற்றப்பட்டு உள்ளனர். எனவே, அவர்கள் தங்கள் பழைய உள்ளீட்டு தகவல்களை கொண்டு இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.

இவ்வாறு பத்மஜா சுந்துரு தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article