இயற்கை விந்தைகளில் ஒன்று அல் நெஸ்லா பாறை

0
55

சௌதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் தாய்மா என்ற ஒருபகுதி உள்ளது. அந்த பகுதி விஞ்ஞானிகளுக்கு சொர்க்க பூமி என்றே கூறலாம். அந்த பகுதியில் ஆச்சரியங்களும் அதிசியமும் நிறைந்துள்ளன.

அதில் ஒன்று தான் அல் நெஸ்லா. பெரிய இயந்திரத்தினால் இரண்டாக வெட்டியது போல் அந்த பாறை காட்சியளிக்கும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பாறை அந்த பகுதியில் இருப்பதாக கூறுகிறார்கள். ஒரு ஆப்பிளை சரியாக இரண்டு பாகமாக கச்சிதமாக கட் பண்ணினால் எப்படி இருக்குமோ அது போன்ற வடிவத்தில் காணப்படுகிறது.

இயற்கையாகவே எந்தவித வெடிப்பும் இல்லாமல் எப்படி இரண்டாக பிளந்தது என ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால் அதற்கான பதில் இன்றுவரை கிடைக்கவில்லை.

30 அடி உயரமும் 25 அடி அகலமும் இருக்கும் இந்த பாறையின் அடித்தளம் மிகவும் குறுகியதாக காணப்படுகிறது. ஆனால் அந்த சின்ன அடித்தளம் மிகவும் உறுதியாக காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் எரிமலை ஒன்று வெடித்து சிதறியதால் இந்த பாறை உருவாகியிருக்கலாம் என கூறுகிறார்கள். அந்த காலகட்டத்தில் தான் மிகச்சரியாக இரண்டு துண்டாக வெட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடி இந்த பகுதிக்கு குடிபெயர்ந்த பழங்குடியினர்கள் கற்களை வைத்து இந்த பாறையை பிளந்ததாக சில குறிப்புகள் இருக்கிறது.

ஆனால் எந்த ஒரு நவீன தொழில்நுட்பமும் பயன்படுத்தாமல் எப்படி மிகக்கச்சிதமாக பிளக்க முடியும் என கூறி அந்த குறிப்புகளை நிராகரித்து விட்டார்கள்.

முன்னொரு காலத்தில் ஏலியன்கள் பூமியில் தொடர்பில் இருந்த போது அவர்களோட குறியீடுகளை பூமியில் விட்டுச் செல்ல இந்த பாறையை லேசரால் கட் பண்ணியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்த மாதிரியான தகவல்களை கேட்க மட்டும்தான் பயன்படும். உண்மை தகவலாக ஏற்றுக் கொள்ள முடியாது என அங்கீகரிப்பவர்கள் நிராகரித்து விட்டனர்.

அல் நெஸ்லா பாறையில் ஒட்டகம் மற்றும் அரேபிய குதிரைகள் போன்றவற்றை அழகாக செதுக்கி உள்ளனர். அதுமட்டுமின்றி விலங்குகளை வேட்டையாடுவது போன்ற படங்களையும் செதுக்கி உள்ளனர்.

ஆனால் இவை அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செதுக்கப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

இந்த அல் நெஸ்லா பாறையை சுற்றி நிறைய குன்றுகள் உள்ளன. ஆனால் அனைத்தும் கோட்டை சுவர் போன்றே காணப்படும். அதிலும் நிறைய சிற்பங்கள் வடித்துள்ளனர்.

ஆனால் சவுதி அரசாங்கம் நிறைய கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் நிறைய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பல வருடங்களாக விடா முயற்சியால் அல் நெஸ்லா பாறையை செர்ரி லிவிஸ் என்ற ஆராய்ச்சியாளர் இந்த பாறையை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து வெளி உலகிற்கு எடுத்துரைத்துள்ளார்.

ஆனால் அவரோட ஆராய்ச்சியின் முடிவு பல கற்பனை கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடி குளிர்ச்சி அதிகமானதால் இந்த பாறையை அப்படியே உருகி ஐஸ்கட்டியாக உறைந்துள்ளது.

சில நூறுவருடங்களுக்கு பின்னாடி சூரிய வெப்பம் அதிகமானதால் அந்த பாறைக்குள் இருந்த ஐஸ் உருகி அழுத்தம் தாங்காமல் இந்த பாறை வெடித்ததனால் இப்படி உருவாகி இருக்கிறது என ஆராய்ச்சியில் முடிவில் செர்ரி லிவிஸ் தெரிவித்துள்ளார்.

என்னதான் ஐஸ் அழுத்தம் அதிகரித்து பாறை வெடித்து சிதறினாலும் எப்படி மிகச்சரியாக இரண்டாக பிளக்க முடியும் என்ற கேள்வியை செர்ரி லிவிஸிடம் பல ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் செர்ரி லிவிஸ் மீண்டும் தனது ஆராய்ச்சியை தொடங்கி உள்ளார்.

உலகில் அதிக அளவிலான மக்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் பகுதி என அல் நெஸ்லா பாறை சாதனை பெற்றுள்ளது.

புகைப்படம் எடுப்பது மட்டுமின்றி அங்கு சென்று நமது பெயரையும் அங்குள்ள பாறைகளில் பொறித்துக் கொள்ளலாம் என்ற சட்டமும் அங்கு உள்ளதால் வெளிநாடு சுற்றும் நபர்களுக்கு அல் நெஸ்லா பாறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.