யூடியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாலிவுட் நடிகர் வழக்கு

Get real time updates directly on you device, subscribe now.

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஜுன் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியதில் பாலிவுட் திரையுலகில் அதிகளவு போதைப் பொருள் பயன்பாடு இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பீகாரைச் சேர்ந்த ரஷீத் சித்திக் என்பவர் எப்எப் நியூஸ் என்ற தனது யூடியூப் சேனலில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக ஏராளமான வீடியோக்களை அப்லோட் செய்துள்ளார். இதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

https://www.youtube.com/c/FILMYFRIDAY/videos

சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மஹாராஷ்டிரா மந்திரி ஒருவருக்கும் அவரது மகனுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த சேனலில் செய்தி வெளியிடப்பட்டது. அதற்காக ரஷீத் சித்திக் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் மேலும் வெளியிட்டுள்ள வீடியோவில் சுசாந்த் சிங் ராஜ்புத் காதலி ரியா கனடாவிற்கு தப்பி செல்ல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் உதவியதாகவும், அவர் தோனி படத்தில் நடித்ததை அக்‌ஷய் குமார் விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஷீத் சித்திக் தனது யூடியூப் சேனலில் தவறாக தெரிவித்துள்ளார் என்றும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 500 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரி சட்ட நிபுணர்கள் மூலமாக நடிகர் அக்‌ஷய்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More