IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் இரண்டாவது கிளையை அறிமுகபடுத்தி உள்ளது ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீஸ் லிமிடெட்

Get real time updates directly on you device, subscribe now.

ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவான மருத்துவர்கள் மற்றும் ஐ.ஐ.டி யாளர்கள் ஆகவேண்டும் நனவாக்க உதவும் வகையில் டெஸ்ட் தயாரிப்பு சேவைகளில் தேசியத் தலைவரான ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீஸ் லிமிடெட் (ஏ.இ.எஸ்.எல்) அதன் வலையமைப்பை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதற்கான குறிக்கோளை மேலும் மேம்படுத்துவதற்காக, தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரமும் கோயில் நகரமுமான மதுரையில் இன்று தனது இரண்டாவது மையத்தை திறந்து உள்ளது.

கலவாசல் சந்திப்புக்கு அருகிலுள்ள ஜெர்மானஸ் ஹோட்டலுக்குப் பின்னால் மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த புதிய மையம் 2017 ஆம் ஆண்டில் சொக்கிகுளத்தில் தொடங்கப்பட்ட அதன் முதல் மையத்தை அடுத்த இரண்டாவது மையம் ஆகும். மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மற்றும் விரும்பும் மாணவர்களுக்கு இந்த மையம் சேவைகளை வழங்கும் அத்துடன் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் ஆரம்ப அளவிலான படிப்புகளை வழங்குகிறது. எ.கா. அடிப்படைகளை வலுப்படுத்துவதைத் தவிர ஒலிம்பியாட் போன்றவைகளுக்கு. ஆகாஷ் நிறுவனம் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பிற நகரங்கள் சென்னை, கோயம்புத்தூர், சேலம், வேலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி.

புதிய மையத்தை ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீஸ் லிமிடெட் (ஏ.இ.எஸ்.எல்) தலைமை வணிக அதிகாரி (சிபிஓ) திரு அனுப் அகர்வால் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏ.இ.எஸ்.எல் துணை பிராந்திய இயக்குநர் திரு சந்தன் சந்த், மற்ற நிறுவன அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் நகரத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

துவக்க விழாவில் பேசிய திரு அகர்வால் “மதுரையிலிருந்து வரும் திறனையும் தேவையையும் பார்த்து, எங்கள் இரண்டாவது மையத்தை நகரத்தில் அமைக்க முடிவு செய்தோம். புதிய மையம் மருத்துவர்கள் மற்றும் ஐ.ஐ.டி. யாளர்களாக மாற விரும்பும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒரு பெரிய வரமாக இருக்கும். இன்று, ஆகாஷ் அதன் பான்-இந்தியா மையங்களின் நெட்வொர்க் மூலம் நாடு முழுவதும் தரமான கல்வியை வழங்குவதற்காக பரவலாக அறியப்படுகிறது. அதன் கல்வி உள்ளடக்கத்தின் தரம் மற்றும் அதன் கற்பித்தல் முறைகளின் செயல்திறன், அதன் மாணவர்களின் தேர்வுகளின் எண்ணிக்கைக்கு சான்றாக, இளங்கலை மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு தகுதி பெற விரும்பும் மாணவர்களுக்கு ஆகாஷ் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. ” என்றார்.

ஆகாஷில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் நேரடி சேர்க்கை (டிஏ), அட்மிஷன் கம் ஸ்காலர்ஷிப் டெஸ்ட் (ஏசிஎஸ்டி) அல்லது ANTHE (ஆகாஷ் தேசிய திறமை வேட்டை தேர்வு) க்கு பதிவு செய்யலாம். 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக சமீபத்தில் நடத்தப்பட்ட ANTHE, அவர்களுக்கு உதவித்தொகையும் வெல்ல ஒரு வாய்ப்பை வழங்கியது. ஏ.இ.எஸ்.எல் விரைவில் நெஸ்ட் உடன் வார உள்ளது – ஆகாஷ் தேசிய தகுதி மற்றும் உதவித்தொகை சோதனை – இது தேசிய அளவிலான உதவித்தொகை தேர்வாகும், இது மாணவர்களுக்கு தேசிய அளவில் போட்டியிடவும், கல்விக் கட்டணத்தில் 80% வரை உதவித்தொகை பெறவும் வாய்ப்பளிக்கிறது.

“மதுரையில் எங்கள் இரண்டாவது கிளையைத்திறப்பதன் மூலம், நகரத்திலும், தமிழகத்திலும் எங்கள் தடம் விரிவுபடுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் தேசிய நெட்வொர்க்கில் இந்த கிளையைச் சேர்ப்பது, தரப்படுத்தப்பட்ட தரமான கற்பித்தல், நவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் இயக்கப்பட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கற்றலுக்கு உகந்த சூழலை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. ” என திரு அகர்வால் மேலும் கூறினார்.

ஆகாஷில் வழங்கப்படும் திட்டங்கள் பல்வேறு தேர்வுகளுக்கு மாணவர்களை விரிவாகவும் முழுமையுடனும் தயார் செய்கின்றன. மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட கற்பித்தல் முறை கருத்தியல் மற்றும் பயன்பாட்டு அடிப்படையிலான கற்றலில் கவனம் செலுத்துகிறது, இது ஒரு பிராண்டாக வேறுபடுகிறது. ஆகாஷில் உள்ள நிபுணத்துவம் கொண்ட ஆசிரியர்கள் மாணவர்களின் இலக்குகளை அடைய உதவும் நவீன மற்றும் ஊடாடும் கற்பித்தல் முறைகளை பின்பற்றுகிறார்கள். ஆகாஷின் நிரூபிக்கப்பட்ட வெற்றிப் பதிவு, அதன் தனித்துவமான கல்வி விநியோக முறைக்கு காரணமாக இருக்கலாம், இது கவனம் செலுத்திய மற்றும் முடிவு சார்ந்த கற்பித்தல் முறையை வலியுறுத்துகிறது.

 


#AkashEducationalServicesLimited #introduced #secondbranch #Madurai

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader