வலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜித்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த படைப்பாக ஹெச்.ராஜா இயக்கும் படம் வலிமை. இந்தப்படத்தில் அஜித் குமார் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களில் கொரோனா வைரஸ் லாக்டவுனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கிய 10 நாட்களுக்கு முன்னர் சண்டை காட்சிகளில் கலந்து கொண்ட போது நடிகர் அஜித்தின் கையில் சிறிய காயம் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு மீண்டும் அஜித் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அவரது பகுதிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது அஜித் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே அஜித்திற்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் தன்னம்பிக்கையோடு நடித்து வருகிறார். அஜித்திற்கு காயம் ஏற்பட்டதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

#getwellsoonthala #ajithkumar #valimai

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More