IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஏர் ஏஷியா, சிறப்புச் சலுகைகளுடன் மாபெரும் விற்பனையை அறிவித்திருக்கிறது

Get real time updates directly on you device, subscribe now.


குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வரும், மக்களால் அதிகம் விரும்பப்படும் விமான சேவை நிறுவனமான ஏர் ஏஷியா, தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கும் மாபெரும் விற்பனையை அறிவித்திருக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் விற்பனை நாட்களில் ஏர் ஏஷியாவில் பயணிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் அனைத்து இடங்களுக்கும் செல்ல அட்டகாசமான சலுகைகளைப் பெற்று பயனடையலாம்.


விருந்தினர்களுக்கு அற்புதமான சலுகைகளை அளிக்கும் பொருட்டு, உள்நாட்டு வழித்தடங்களுக்கான ஒரு வழி விமான பயண கட்டணம்   899 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. அதேபோல், சர்வதேச வழித்தடங்களுக்கு ஒரு வழி விமான பயண கட்டணம் 2099 ரூபாய் முதல் ஆரம்பிக்கிறது.


ஏர் ஏஷியாவின் இந்த  மாபெரும் சலுகை விற்பனையில், ஏர் ஏஷிய பிக் மெம்பர்களுக்கான முன்பதிவு 22-ம் தேதி செப்டம்பர் 2019 முதல் ஆரம்பிக்கிறது. இதர விருந்தினர்களுக்கான முன்பதிவு 23-ம் தேதி செப்டம்பர் 2019 முதல் ஆரம்பமாகிறது. மேலும் இந்த  ’பிக் சேல்’ 26-ம் தேதி செப்டம்பர் 2019 வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு சலுகையின் மூலம் முன்பதிவு செய்பவர்கள், 10-ம் தேதி பிப்ரவரி 2020 முதல் 15-ம் தேதி டிசம்பர் 2020 வரையிலான காலக்கட்டத்தில் தங்களது பயணத்தை மேற்கொள்ளமுடியும். ஏர் ஏஷியா பிக் மெம்பர்கள், இந்த விற்பனையில் ப்ரத்யேக முன்னுரிமையாக இந்த சலுகைகளை 22-ம் தேதி செப்டம்பர் 2019 இரவு 21.30 மணி முதல் பெறமுடியும்.


பிக் சேல் அறிமுகம் குறித்து பேசிய ஏர் ஏஷியா இந்தியாவின் சி.ஓ.ஓ சஞ்சய் குமார், கூறுகையில் “உலகில் மிக அதிகம் விரும்பப்படும் குறைந்த கட்டண விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக,  மிக அதிகமான மக்கள் உலகப் பயணம் செய்ய ஊக்குவிக்கிறோம். விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் நெருங்கி வரும் நிலையில்,  பயணம் செய்ய விரும்பும் பெரும்பாலான மக்கள் தங்கள் விடுமுறையை இப்போது ஏர் ஏஷியாவின் ’பிக் சேல்’ மூலம் அருமையாக  திட்டமிடலாம். பிக் சேல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், உலக முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் விமான பயணம் செய்யும் வாய்ப்பை சுலபமாக்கி இருக்கிறோம்’’ என்றார்.


#Air Asia #announced #special #offers

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More