IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மத்திய அரசை விமர்சித்து அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள்

Get real time updates directly on you device, subscribe now.

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் அந்தக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக செயற்குழு கூட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்மானங்களில் அந்த பரபரப்பு காணப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி – ஓ. பன்னீர் செல்வம் இருவரும் இணைந்து உருவாக்கிய இந்த தீர்மானங்களில் மத்திய அரசை விமர்சித்து பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா காலத்தில் ஜிஎஸ்டி வரி பாக்கியை தராதது, நீட் தேர்வை நடத்தியது என மத்திய அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் பல அதிமுக செயற்குழுவில் இடம்பெற்றுள்ளது. ஆனால் எடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது அதிமுக பொதுச்செயலாளர் என்றோ எந்த தீர்மானமும் இல்லை.

ஆனால் செயற்குழுவில் நடைபெறும் விவாதத்தில் இந்தப் பிரச்சனை ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். ஆதரவாளர்களால் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அதிமுகவின் செயற்குழு அடுத்தக் கட்ட பரபரப்பிற்கு நகர்ந்து சென்றிருக்கிறது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader