IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அமமுக இதெல்லாம் ஒரு கட்சியா…? எதிர்க்கும் அதிமுக

0 47

அமமுகவை கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை எதிர்த்து அதிமுக தரப்பிலும் பதிலுக்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளதாகவும், டிடிவி தினகரன் கட்சியின் பெயரில் அம்மா என்ற வார்த்தையை உபயோகிக்கப்படுவதால் அமமுகவை கட்சியாக பதிவு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அதிமுக வக்கீல் பாபு தெரிவிக்கும் போது, சசிகலாவும், தினகரனும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்றார். இதனால் கட்சியில் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் அமமுக கட்சியில் அம்மா என்ற வார்த்தையையும் பயன்படுத்த தார்மீக உரிமை டிடிவி தினகருனுக்கு கிடையாது என்றும் அதிமுக தரப்பில் வக்கீல் வாதிட்டார்.

இதனையடுத்து அதிமுக தரப்பினர் மற்றும் அமமுகவினர் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் அவரது புகைப்படம் மற்றும் மக்களால் அழைக்கப்பட்ட ”அம்மா“ என்ற வார்த்தையை இருகட்சிகளும் தங்களுக்குத்தான் சொந்தம் என்ற பாணியில் சண்டையிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.