IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சேலம் முன்னாள் எம்.பி காவல் துறையினருடன் தகராறு! இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு

Get real time updates directly on you device, subscribe now.

சேலத்தில் வசிக்கும் முன்னாள் எம்பி அர்ஜுனன் நேற்றிரவு ஓமலூர் சென்றுவிட்டு சுங்கச்சாவடி அருகே வந்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டனர். கோபமடைந்த அர்ஜுனன் போலீசாருடன் வாய் தகராறில் ஈடுபட்டார்.

சேலம் பகுதியில் வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் மாவட்ட எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் மருத்துவத் துறையுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு புதிய அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே சேலம் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓமலூரில் பணியை முடித்துக்கொண்டு முன்னாள் எம்பி அர்ஜுனன் ஓமலூர் டோல்கேட் வந்தடைந்தார். அங்கு பாதுகாப்பு பணியிலும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அந்த வழியே வரும் வாகனத்தை சோதனை செய்து அனுப்பி வைத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் முன்னாள் எம்பியும் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினருமான அர்ஜுனனின் கார் டோல்கேட் அருகே வந்தது. அப்போது காவல்துறையினர் உரிய ஆவணங்கள் இருக்கின்றனவா உங்களின் அடையாள அட்டையை காண்பிக்க சொல்லி கேட்டுள்ளனர். இதனை அடுத்து அர்ஜுனன் நான் யார் தெரியுமா என்னை தெரியாமல் ஏன் நீ இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக அவர் காரில் இருந்து இறங்கி காவல்துறை யினருடன் தகாத வார்த்தைகள் பேசி தரக்குறைவான வார்த்தைகளை பேசி காவல்துறையினரை வசைபாடினார். இதனையடுத்து காவல்துறையினருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

சேலம் அருகே போலீசை தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ அர்ஜுனன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader