IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சென்னை தலைமை செயலகத்தில் அதிமுகவின் 49ம் ஆண்டு தொடக்க விழா

Get real time updates directly on you device, subscribe now.

சென்னை தலைமை செயலகத்தில் அதிமுகவின் 49ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் அதிமுகவின் 49ம் ஆண்டு தொடக்க விழா:

அருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துகளை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கழக பொன்விழா ஆண்டிலும் அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்னும் வரலாற்றை படைப்போம்! வாகை சூடுவோம்!! என டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பொன் விழா ஆண்டிலும் அதிமுக அரசு ஆட்சியை பிடித்து சாதனை படைக்கும் என்று தெரிவித்திருந்தனர். தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மாவட்ட கட்சி அலுவலகங்களில் அதிமுக கொடிகளை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் இன்றைய தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அதிமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயல‌லிதா ஆகியோரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

#admk #ops #49inaugrationcelebration

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader