IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அகத்திகீரை மருத்துவ பயன்கள்

Get real time updates directly on you device, subscribe now.

 

தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் கொண்டுள்ளது அகத்திக்கீரை. சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் உள்ளது. அகத்திக் கீரையில் 8.4% புரதமும் 1.4% கொழுப்பும், 3.1% தாது உப்புகளும் இருக்கிறது.

அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்தம் சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும். வாய்ப்புண் உள்ளவர்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

அகத்திக்கீரையில் உள்ள பூவை சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும். அகத்திக்கீரையை சாறு எடுத்து இரு துளி மூக்கில் விட்டால் தும்மல், ஜலதோஷம் தீரும். அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் விரைவில் தொண்டை பிரச்சனை குணமாகும்.

அகத்திக் கீரையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் மார்பில் ஏற்படும் வலி முற்றிலுமாக குறையும். அகத்திக் கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

 

#agathu #kirai #benefits

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader