IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிதம்பரத்தை பாடாய்படுத்தும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை

0 23

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.

நேற்று மீடியா தொடர்பான வழக்கில் சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடும்போது, ஏற்கனவே சிபிஐ தரப்பில் அனைத்தும் விசாரிக்கப்பட்ட ஒன்றைத் தான் மீண்டும் அமலாக்கத்துறை விசாரிக்கப் போவதாக கூறுகின்றனர்.

மேலும் விசாரித்து முடித்த ஒரே விவகாரத்தை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்கிறார்கள். நீதிமன்றம் இதை அனுமதிக்க கூடாது என்றார். ஒரே வழக்கில் ஒரே சம்பவத்தில் இருமுறை கைது செய்யக்கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது என கபில்சிபல் வாதிட்டார்.

இந்த வழக்கில் இன்று தீர்பபளித்த கோர்ட் அமலாத்துறை, சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தும், தேவைப்பட்டால் மீண்டும் சிதம்பரத்தை கைது செய்யவும் அனுமதி அளித்தது.