IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தலைவர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா

99

கர்நாடகாவில் காங்கிரஸ் மஜக கூட்டணி ஆட்சி நடந்திருந்த போது, காங்கிரஸ் – மஜக எம்.எல்.ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து முதல்வர் பதவியில் இருந்த குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து 105 எம்.எல்.ஏக்களை கொண்டிருந்த பாஜக ஆட்சி அமைத்தது.

15 பேர் ராஜினாமா செய்த தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முடிந்து வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. அதன்படி 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று எடியூரப்பாவின் ஆட்சி தப்பியது. காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்த சித்தராமையா இன்று ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.