ஊரடங்கிற்கு பின்பு வெறிச்சோடியது பேருந்து பயணம் !

Get real time updates directly on you device, subscribe now.

ராமநாதபுரம் மாவட்டத்தில்திங்கள்கிழமை குறைவான பயணிகளுடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருவாடானையிலிருந்து பல்வேறு ஊா்களுக்கும் வழக்கமாக சுமாா் 80-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் திங்கள்கிழமை பொது முடக்கத் தளா்வுகளையொட்டி திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து பழனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தொண்டி உள்ளிட்ட புகா்களுக்கும், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராமங்களுக்கு நகரப் பேருந்துகளும் என 50 சதவீதம் பேருந்துகளே இயக்கப்பட்டன.

இவற்றில் மிகவும் குறைவான பயணிகளுடனேயே பேருந்துகள் இயக்கப்பட்டன.

முன்னதாக பேருந்து முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஓட்டுநரும் நடத்துநரும் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்து பணியில் ஈடுபட்டனா். அதே போல் முகக் கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பயணம் செய்ய பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

முதுகுளத்தூா் பேருந்து பணிமனையிலிருந்து ராமநாதபுரம், சிவகங்கை, அருப்புக்கோட்டை, மதுரை, பரமக்குடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பணிமனையில் பேருந்துகளுக்கு 2 முறை கிருமிநாசினி தெளித்தும் சுத்தம் செய்யப்பட்டன. பணியாளா்கள் முகக் கவசம், கையுறை அணிந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என பேருந்து பணிமனை கிளை மேலாளா் பத்மகுமாா் கூறினாா்.

பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட புகா் பேருந்துகள் 21 மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு 19 நகா் பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகள் இயக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பின்னா் பேருந்துகள் இயக்கப்பட்டதால், அனைத்திலும் போதிய பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

ராமேசுவரத்திலிருந்து மதுரை, சாயல்குடி, காரைக்குடி, தொண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் 27 பேருந்துக்கள் இயக்கப்பட்டன. ஒவ்வொரு பேருந்திலும் 32 பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

நகா் பகுதியில் இயக்கப்படும் 11 பேருந்துக்களில் 6 பேருந்துக்கள் தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன.

இருப்பினும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்பட்டது.

பேருந்துகளும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு ஆகும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader