பிரசவத்திற்கு பிறகு சில மாதங்களிலோ சில ஆண்டுகளிலோ இருப்பு வலி வரும் என்று எல்லா பெண்களும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது பெண்களின் முதுகுத் தண்டு பகுதியில் செலுத்தப்படும் மயக்க ஊசியால்தான் இப்படி வலி ஏற்படுகிறது. என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை என்ன வென்றால் பிரசவத்திற்குப் பிறகு இருப்பு வலி வராது என்றார் பிரபல மயக்கவியல் நிபுணர். டாக்டர் சுதாகர்.
சிசேரியன் நேரத்தில் வலி தெரியாமல் இருக்க போடப்படும் ஊசியால் பிரசவத்திற்கு பிறகு வலி ஏற்படும் என்பதற்கு இது வரை அறிவியல் பூர்வமான ஆதரங்கள் எதுவும் இல்லை. பெண்கள் கர்பமான நாள் முதல் அவர்களுக்கு பலவித பிரட்சனைகள் ஏற்படுகிறது. நமது முதுகு தண்டு தொகுப்பு அவர்கள் வயிற்றில் உள்ள குழந்தையின் எடையை தாங்கும் அளவிற்கு வளைந்து நெகிழ்கிறது. ஆனல் பிரசவத்திற்குப் பின்னர் சிறிது சிறிதாக தன் பழைய நிலைக்குத் திரும்பும் . இது அனைத்தும் ழூளையின் தன்னிச்சையான கட்டளை எனலாம்.
கர்ப்ப காலத்தில் வளைந்த முதுகுத் தண்டு பல பெண்களுக்கு முதுகுத் தண்டு பல பெண்களுக்கு அப்படியே நூற்றுக்கு நூறு சதவீதம் பழைய நிலைக்கு திரும்பும் என்று கூறிவிட முடியாது. எனவேதான் பிரசவத்திற்குப் பின்னர் பழைய உடல் அமைப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக சில உடற்பயிற்சிகளை மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் சோம்பேறித்தனம் அல்லது குழந்தையை கவனிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் ஆர்வத்தில் பெண்கள் தங்கள் உடல் நலத்தை கவனிக்க தவறி விடுகின்றனர். மேலும்
குழந்தைக்கு தாய் பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக பல பெண்கள் அசைவ உணவுகள், பால், முட்டை, கீரைகளை அதிகம் உண்பதால் உடல் எடை அதிகரித்து விடுகிறது. ஏற்கனவே முதுகுத்தண்டு பகுதியில் உள்ள பைபர் பிளேட்கள் அலற்சியில் இருக்கும்போது உடல் எடையும் அதிகர்ப்பதால் இடுப்பு வலி தானாகவே வந்துவிடுகிறது. ஆனால் சிசேரியன் சிகிச்சையின் போது தங்களுக்குப் போடப்பட்ட மயக்க ஊசியால்தான் வலி ஏற்பட்டு விட்டதாக பெரும்பாலான பெண்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த ஒரு நிலையிலும் இடுப்பு வலி அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் உடனடியாக தகுந்த எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
#After #Childbirth #bake #pain