IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

47 நாட்கள் லாக் டவுனுக்கு பிறகு ஆரவாரமில்லாமல் மதுரையில் கடைகள் திறக்கப்பட்டன

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசும் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தற்போது வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

கடந்த 2ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும் சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வர முறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு இல்லாத பகுதிகள் தவிர மற்ற செயல்பாடுகள் பணிகள் இன்று முதல் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் 34 வகையான கடைகள் இயங்கத் தொடங்கின.

அதில் டீக்கடையில் பார்சல் மட்டும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். பேக்கரிகள், உணவகங்கள், பூ பழம் காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், சிமெண்ட் ஹார்டுவேர், சானிட்டரி வேர் விற்கும் கடைகள் மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடையில் மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள் கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் சிறிய நகைக்கடைகள் குளிர்சாதன வசதி இல்லாததை சிறிய ஜவுளிக்கடைகள் குளிர்சாதன வசதி இல்லாத மிக்ஸி கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள் டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கல் கடைகள்ஆகிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டன.

பெட்டிக்கடைகள் சாலையோர தள்ளுவண்டிக் கடைகள் குழு மற்றும் பார்சல் சர்வீஸ் ஜெராக்ஸ் கடை கள் லாரி புக்கிங் சர்வீஸ் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் நாட்டு மருந்து விற்பனை கடைகள் விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள் டைல்ஸ் கடைகள் பழக்கடைகள் பெயிண்ட் கடைகள் கடைகள் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள் உட்பட 34 வகையான கடைகள் இயங்க தொடங்கியது.

அதேநேரம் சலூன் கடைகள் பியூப்டி பார்லர்கள் ஸ்பா திறப்பதற்கான கடைகள் திறப்பதற்கான தடை நீடிக்கிறது என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது மேலும் அனைத்து கடைகளுக்கும் வரும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வருகிறார்கள் அதேபோல் கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியை கடைபிடித்து விற்பனை நடத்தி வருகிறார்கள் என்று கூறலாம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader