IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கள்ளக்காதலியின் நல்ல காதலுக்கு துணைபோன வாலிபர் வெட்டிக் கொலை! பரபரப்பு தகவல்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

கள்ளக்காதலி தனது காதலனுடன் ஓடிப்போனதால் ஆத்திரமடைந்த வியாபாரி, காதலுக்கும், கல்யாணாத்துக்கும் உதவிய வாலிபரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

மதுரை ஆத்திகுளம் வண்டிப்பாதை தெருவை சேர்ந்தவர் துரைபாண்டி. இவருடைய மகன் குருநாதசேது (வயது 25). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆயுதப்படை மைதானத்தில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விபரம் வருமாறு:


மதுரை ஆர்.எஸ். குளத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). இவர் மதுரை வடக்குமாசி வீதியில் பழக்கடை நடத்தி வரும் பஞ்சவர்ணம் என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் குடும்பம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பஞ்சவர்ணத்துடனான உறவு தொடர வேண்டும் என்பதற்காக பஞ்சவர்ணத்தின் தங்கை மகேஸ்வரியை தனது தம்பி பாலமுருகனுக்கு திருமணம் செய்து வைத்தார் ஜெயகுமார்.

ரவுடியை கொன்று மூளையை வெளியே எடுத்தது ஏன்?

பாலமுருகன், மகேஸ்வரி தம்பதியர் மதுரையிலேயே வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலமுருகன் திடீரென இறந்துவிட்டார். அதனை தொடர்ந்து மகேஸ்வரி மீது ஜெயக்குமார் காதல் வயப்பட்டார். அக்காள் பஞ்சவர்ணத்துடன் ஒருபுறம் குடும்பம் நடத்திக் கொண்டு, தங்கை மகேஸ்வரியுடன் தனது கள்ளக்காதலை தொடர்ந்திருக்கிறார் ஜெயக்குமார்.



இதற்கிடையே ஜெயகுமாரின் உறவினர் கவுதம் அடிக்கடி மகேஸ்வரியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. கவுதமுடன் மகேஸ்வரி பழகுவது ஜெயக்குமாருக்கு பிடிக்கவில்லை. தனது கள்ளக்காதலி வேறு ஒருவருடன் காதல் கொண்டிருப்பதை ஜெயக்குமார் கண்டித்தார். ஆனாலும் மகேஸ்வரி – கவுதம் காதல் தொடர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.



வீட்டி விட்டு மகேஸ்வரி வெளியேறி காதலனைக் கரம் பிடித்தார். இவர்களது திருமணத்திற்கு குருநாதசேது உதவியிருக்கிறார். கள்ளக்காதலி தன்னை ஏமாற்றிவிட்டு, காதலனுடன் சென்று விட்டதால் ஆத்திரம் அடைந்தார் ஜெயக்குமார். அதோடு திருமணம் செய்து வைத்த குருநாதசேது மீது கோபம் அதிகமானது. அவரிடம் நேரில் சென்று தகராறு செய்துள்ளார்.

இப்படியும் ஒரு கொடூரம்

அந்த தகராறு கைகலப்பாகி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த மகேஸ்வரி சண்டையை விலக்க முயன்றுள்ளார். ஜெயக்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குருநாதசேது மற்றும் மகேஸ்வரியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மகேஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குருநாத சேது லேசான காயங்களுடன் தப்பினார்.

இருப்பினும் ஆத்திரம் அடங்காத ஜெயக்குமார், குருநாதசேதுவை தீர்த்து கட்ட முடிவு செய்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொலை செய்துள்ளார். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜெயக்குமார் மற்றும் அவருக்கு உதவியவர்கள் என 8 பேர் மீது தல்லாக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#Affair #murder #crime #love #marriage

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader