IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அதிமுக பொதுக்குழு கூட்டம் – 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்

114


தமிழக பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் 2016ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவது கேள்விக் குறியாக மாறி போனது. தற்போது வருகின்ற டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து தமிழக அரசியல் சூடு பிடித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து கட்சிகளும் எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தொண்டர்களிடம் இருந்து ஏற்கனவே விருப்ப மனுக்களை பெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்திற்கு, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:-

  • சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி.
  • விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு பாராட்டு.
  • இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி.
  • உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அனைவரும் உழைத்திட வேண்டும் என தீர்மானம்.
  • அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
  • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி.
  • பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசுக்கு பாராட்டு.
  • நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம்.
  • அதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
  • தொழில் முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டு பயணம் ஆகியவற்றிற்காக தமிழக அரசுக்கு பாராட்டு.
  • தமிழ்நாடு நாள் கொண்டாடிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.
  • கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்த தமிழக அரசுக்கு பாராட்டு.
  • இலங்கை தமிழர்களின் சமஉரிமையை உறுதி செய்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
  • காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை

போன்ற பல்வேறு கோரிக்கை மற்றும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.