IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வாக்குச்சீட்டை கிழித்து எறிந்த அதிமுக கவுன்சிலர்-தேர்தல் ஒத்திவைப்பு

48

 

சாத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் அதிமுக, திமுகவினர் மோதிக்கொண்டதுடன், வாக்கு சீட்டினை அதிமுக கவுன்சிலர் கிழித்தெறிந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 16 வார்டுகளில் வெற்றி பெற்ற 8 திமுக உறுப்பினர்கள் , 5 அதிமுக உறுப்பினர்கள், 2 மதிமுக உறுப்பினர்கள், பாஜக உறுப்பினர் ஒருவர் என அனைவரும் தேர்தல் நடக்கும் பகுதிக்கு வந்திருந்தனர்.

அப்போது 5 வது வார்டு அதிமுக உறுப்பினர் வசந்தாவுக்கும், 12 வது வார்டு திமுக உறுப்பினர் சந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதனால் ஏற்பட்ட கூச்சல், குழப்பம் காரணமாக 30 நிமிடம் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

பின்னர் 30 நிமிடம் கழித்து தேர்தல் நடத்த தயாரான போது மீண்டும் அதிமுக, திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் வாக்குசீட்டை கிழித்து எறிந்துள்ளனர். இதையடுத்து தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தேர்தல் அதிகாரி காளிமுத்து தெரிவித்து விட்டு சென்று விட்டார். தேர்தல் ஒத்தி வைத்தால் அதிமுக,திமுக உறுப்பினர்களை போலீஸார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து வெளியேற்றினர்.

அப்போது வெளியே காத்திருந்த திமுக, அதிமுக உறுப்பினர்களின் ஆதரவாளர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

 

#ADMK #councilor #electoral #postponement