IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

முதல்வர் பழனிச்சாமி, பிரதமரின் எடுபிடி! பிரச்சாரத்தில் உதயநிதி ஆவேசம்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் தற்போது அதிமுகவின் கேடுகெட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் தமிழக முதல்வர் பழனிச்சாமி பிரதமரின் எடுபிடியாக இருக்கிறார் என்றும் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் தற்போது விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் 2நாள் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாம்பலப்பட்டு என்ற இடத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைப் போன்று உதயநிதியும் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய உதயநிதி, அதிமுக கட்சியை கடும் விமர்சனம் செய்து பேசினார்.

தமிழக முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார். ஆனால் விசாரணை ஆணையத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி சம்மன் அனுப்பியும் ஓ.பி.எஸ் ஆஜராகவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தபின் ஜெயலலிதாவின் மரணம் பற்றி முழுமையாக விசாரணை அமைக்கப்படும் என்று நம் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பதை நினைவுபடுத்துகிறேன். திமுக ஆட்சியின் போது விக்கிரவாண்டி தொகுதியில் 200 பகுப்பு வீடுகள் கட்டிதரப்பட்டது. அதே போன்று கால்நடை மருத்துவமனைகளும், கிராமங்களில் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டிருந்தன. ஆனால் அதிமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதியில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் தற்போது ஒரு கேடுகெட்ட ஆட்சி நடைபெறுகிறது.

தற்போது தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, பிரதமரின் எடுபிடியாக இருக்கிறார். பிரதமரின் ஆணைக்கிணங்கவே தமிழகத்தில் தற்போது ஆட்சி நடைபெறுகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தீர்கள். அதிமுகவிற்கு சரியான சவுக்கடி கொடுத்தீர்கள். தற்போது அதிமுகவிற்கு சரியான படம் புகட்ட வேண்டும்.

மக்களவைத் தேர்தலைப் போன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுகவிற்கு அமோக வெற்றியளித்து மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என உதயநிதி பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader