அதிமுக தொடக்க விழாவினை தனது சொந்த ஊரில் கொண்டாடும் முதல்வர் பழனிச்சாமி

Get real time updates directly on you device, subscribe now.

அதிமுக கட்சியின் 49ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் சிலுவம்பாளைத்தில் முதல்வர் பழனிச்சாமி தனது வீட்டின் அருகே இன்று கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி இன்று தனது 49ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் இந்த நாளை கொண்டாட அதிமுக தொண்டர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லம் அருகே கொடியேற்றுகிறார். தாயாரின் மறைவால் தனது ஊரில் உள்ள கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்பிக்கவுள்ளார்.

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திலும் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவினை கட்சி ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமை ஏற்பார் எனத் தெரியவருகிறது.

#eps #cmot #49thyearcelebration #aiadmk #in4net

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader