IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

விவாகரத்து வழக்கு : வாய்தாவிற்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் அதிதி மேனன்

Get real time updates directly on you device, subscribe now.


தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரச்சனைக்காக பல பெயர்களை மாற்றிக் கொண்ட நடிகை அதிதி மேனன், இவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் அபி சரவணன் தான் குடும்ப பிரச்சனைக்காக கோர்ட் வாசல் ஏறி இறங்கி வருகிறார்.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பிறந்த அதிதி மேனன் மலையாள சின்னத்திரை தொலைக்காட்சி மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கினார். சீரியலில் வில்லியாக அறிமுகமான அவருக்கு பிரச்சனைகள் தொடங்கவே தமிழ் சினிமா பக்கம் திரும்பினார்.


தமிழில் முதன்முறையாக நெடுநெல்வாடை என்ற படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். சர்ச்சைக்கு பெயர் போன அதிதி மேனன், ஒவ்வொரு முறையும் பிரச்சனையிலிருந்து தப்பிக்க தனது பெயரை மாற்றிக் கொண்டு நடித்தார். அவர் இதுவரை 4முறை பெயரை மாற்றிக் கொண்டு நடித்து வருகிறார்.


அதனைத் தொடர்ந்து பட்டதாரி என்ற படத்தில் இளம் நடிகர் அபி சரவணனுடன், அதிதி மேனன் என்ற பெயரில் இருவரும் ஜோடி சேர்ந்தனர். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அபி சரவணனை காதலித்து, மணமுடித்து ஜோடி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய படங்களைக் காட்டிலும் பட்டதாரி படம் இவருக்கு ஓரளவு பெயரை பெற்று தந்தது. பின்பு தினேஷுடன் களவானி மாப்பிள்ளை என்னும் படத்தில் அதிதிமேனன் நடித்தார்.


நடிகர் அபி சரவணன் மதுரையைச் சேர்ந்தவர். அவர் பல்வேறு பொதுநலத் தொண்டுகள் செய்து வருபவர். இந்நிலையில் அபி சரவணன், அதிதி மேனன் காதல் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் ரகசியமாக நடந்துள்ளது. திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
4வது முறையாக பெயரை மாற்றிக்கொண்ட சர்ச்சை நாயகி!


திருமணம் ஆன தகவல் கசிந்தால், அதிதியின் சினிமா வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் என்பதால், திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவிக்காமல் சென்னையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.


இந்நிலையில் அதிதீ மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அபி சரவணன் புகார் ஒன்றை தெரிவித்தார். ஆனால், நான் அபியை காதலித்னே தவிர… திருமணம் செய்யவில்லை என அதிதிமேனன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களைச் சந்தித்து அதிதி நீண்ட விளக்கம் அளித்தார். அதில் சமூக சேவை என்ற பெயரில் பலரிடம் பணம் வாங்கி அபி ஏமாற்றி வருகிறார் என்று யாரோ எழுதிக் கொடுத்ததை வாசிப்பது போன்று பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.


பதிலுக்கு அபியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, போட்டோக்களை வெளியிட்டார். தான் செய்து வரும் சமூக சேவையின் மீது களங்கம் கற்பித்த அதிதியைக் கண்டித்ததோடு, இதுவரை அவர் செய்த உதவிகள், யாரிடம் இருந்து எல்லாம் பணம் பெறப்பட்டது? அவை எப்படி உதவிகளாக மக்களுக்கு வழங்கப்பட்டது? என்று நீண்ட விளக்கம் அளித்தார். பின்பு வங்கி ஸ்டேட்மெண்ட்களையும் பத்திரிகையாளர்களிடம் காண்பித்து தன்பக்கம் உள்ள நியாயத்தை கண் கலங்கி எடுத்துரைத்தார்.


இதற்கிடையில், அபி, அதிதி தம்பதியின் விவாகரத்து வழக்கு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது அபி மற்றும் அதிதி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் மாதம் 27ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தம்பதியருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 27 இன்று அபி சரவணன் அதிதி மேனன் விவாகரத்து வழக்கு 7வது வாய்தாவாக விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் அதிதி மேனன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுவரை 7 வாய்தாவில் 2 முறை மட்டுமே நேரில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து முறை கோர்ட்டில் வாய்தாவிற்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.


நீதிமன்றத்தில் ஆஜரான அபிசரவணனிடம், அதிதி மேனன் நேரில் ஆஜராகததால் அடுத்த வாய்தா வருகின்ற நவம்பம் மாதம் 1ம் தேதி இருவரையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.


அதிதி மேனன் தற்போது மலையாள திரையுலகில் மிர்லா மேனன் என்ற பெயரில் மோகன் லாலுடன் பிக் பிரதர் மற்றும் சித்திக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#AbiSaravanan #AditiMenon #MirlaMenon #AthiraSanthosh #In4Net

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More