IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஆள வைச்சு தூக்கி, கை கால்களை உடைச்சுடுவேன் – தொழிலதிபரை மிரட்டிய நடிகை மீது வழக்கு

5


பிரபல தொழிலதிபரை கடத்தி கை கால்களை உடைச்சுடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நடிகை மீரா மிதுன்(32). இவர் தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் மாடலிங் தொழிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமீபத்தில் தான் வெளியேறினார்.


இவர் சென்னை வடபழனியில் 14 பெண்களுடன் சேர்ந்து “மிஸ் தமிழ்நாடு திவா” என்னும் அழகிபோட்டியை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் என்னுடன் நெருங்கி பழகிய சென்னை எழும்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜோ மைக்கேல் பிரவீன்(32) என்பவர் என் மொபைலில் உள்ள என் குளியலறை காட்சியை திருடிக் கொண்டு அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறார் என மே மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.


மீரா மிதுன் அழகி போட்டி நடத்துவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டு வருவதாக வடபழனியைச் சேர்ந்த ஜோஸ்டினா, ரஞ்சிதா என்பவர்கள் புகார் அளித்திருந்தனர். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுவிட்டார்.


இந்நிலையில் மீரா மிதுன் தன் நண்பர் வெங்கட் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தொழில் அதிபர் ஜோ மைக்கேல் பிரவீனை ஆள் வைச்சு தூக்கிடு, பின்பு கை கால்களை அடிச்சு உடைச்சுப்போடு என செல்போனில் கூறியுள்ளார். அதை வெங்கட், ஆடியோவாக பதிவு செய்துள்ளார். இதையடுத்து ஜோ மைக்கேல் ஆடியோ ஆதாரத்துடன் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இந்நிலையில் மீரா மிதுன் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுதல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.