IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிரபல இயக்குநரும் சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் இன்று காலமானார்

25


பிரபல இயக்குநரும் சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.


பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் நடித்த ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகி சின்னப்பூவே மெல்லப் பேசு, தூரம் அதிகமில்லை, கல்யாணக் காலம், பறவைகள் பலவிதம், தூரத்துப் பச்சை, மனசுக்குள் மத்தாப்பூ போன்ற படங்களை தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து இயக்கி உள்ளார்.


மேலும் ஒருதலைராகம் உள்ளிட்ட சில படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு நடிப்பில் கவனம் செலுத்திய ராஜசேகர் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சின்னத்திரை தொடர்களிலும் தொடர்ந்து நடித்தார். மேலும் சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பில் இருந்தார்.


கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது ஆழ்ந்த இழங்கலை தெரிவித்து வருகின்றனர்.