வேஷ்டி சட்டை விளம்பரத்தில் நடித்த அஜித், வெள்ளித்திரையில் பிரபலமாகிய படம் ஆசை

Get real time updates directly on you device, subscribe now.

மணிரத்னத்தின் ஆலயம் தயாரிப்பில், வஸந்த் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் ஆசை. இந்தப்படத்தில் முதலில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது; ஆனால் அப்போது அவருக்கு நடிப்பதில் ஆர்வமில்லை. இதையடுத்து, அரவிந்த்சாமியை அணுகினர்; அவரிடம், அப்போது கால்ஷீட் கிடைக்கவில்லை.

அப்போது டிவியில், வேட்டி விளம்பரத்தில் நடித்தவர், அந்த கதாபாத்திரத்திற்கு பொறுத்தமாக இருந்தார்.

ஹீரோ தேடும் படலத்தில் வஸந்த் ஈடுபட்டார். அப்போது டிவியில், வேட்டி விளம்பரத்தில் நடித்தவர், அந்த கதாபாத்திரத்திற்கு பொறுத்தமாக இருந்தார். ஆனால் அவர், ஹீரோவாக ஏற்கனவே நடித்திருந்த நான்கு படங்களும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவரையே ஆசை படத்திற்கு ஹீரோவாக்கினார், வஸந்த். அந்த ஹீரோ தான், அஜித்!

இந்தப்படத்திற்கு முதலில் பூவெல்லாம் கேட்டுப்பார், கண்ணே போன்ற பெயர்கள் தேர்வு செய்யப்பட்டன; இறுதியில், ஆசை என்ற பெயரில் வெளியானது! கொழுந்தியாள் சுவலட்சுமி மீது ஆசைப்படுவார், பிரகாஷ்ராஜ். அதற்காக, மனைவியையே கொலை செய்வார். சுவலட்சுமி விரும்பும் அஜித்தை சதி திட்டம் தீட்டி பிரித்து விடுவார். இந்த உண்மை அனைத்தையும் உணரும் மாமனார், பூர்ணம் விஸ்வநாதன் என்ன முடிவு எடுத்தார் என்பது தான், படத்தின் கிளைமேக்ஸ்!

துறுதுறு இளைஞனான, ஜீவா கதாபாத்திரத்தில் அஜித் அனைவரையும் கவர்ந்தார். வெளியே, எம்.ஜி.ஆராகவும்; உள்ளே, நம்பியாராகவும் நடித்திருப்பார் பிரகாஷ்ராஜ். தேவா இசையமைத்த பாடல்களா இது? என, அனைவரையும் பிரமிக்க செய்தார். கொஞ்சநாள், மீனம்மா அதிகாலையிலும், புல்வெளி புல்வெளி, சாக்கடிக்குது சோனா… போன்ற பாடல்கள், பெரும் வெற்றி பெற்றன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More