IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

2021 வரை கூகுள் அறிவித்துள்ள அதிரடி அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. இதன் தாக்கத்தினால் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு தமது பணியாளர்களை கேட்டுக் கொண்டது. இவற்றில் கூகுள் நிறுவனமும் ஒன்றாகும்.

தற்போதுவரை கூகுளின் பெரும்பாலான பணியாளர்கள் வீட்டிலிருந்தவாறு தொலை அணுகல் முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு அந்நிறுவனத்தின் மேலதிகாரியான சுந்தர் பிச்சை தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரை வீட்டிலிருந்தவாறு தொலை அணுகல் முறையில் பணியாற்ற அனுமதிக்கப்பட உள்ளனர். இதே வேளை அமேசான் நிறுவனமும் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி வரை தனது பணியாளர்களை மீள அழைக்கப் போவதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader