அப்துல் கலாமின் 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி! டுவிட்டரில் முதலிடம்

Get real time updates directly on you device, subscribe now.

அப்துல் கலாமின் 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் #apjabdulkalam என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. அப்துல்கலாமின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில் அப்துல்கலாமின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருபவர்கள் கலாமின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிக் கூடம், அவர் உருவாக்கிய விண்வெளி சாதனங்கள், அவர் பெற்ற விருதுகள் ஆகியவற்றையும் பார்த்து செல்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் கலாமின் நினைவு தினத்தில், ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவகத்திற்கு அப்துல்கலாம் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சென்று மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள். கலாமின் கனவை நனவாக்கி ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்குவதற்காக இளைஞர்கள், மாணவர்கள் உறுதிமொழியும் எடுத்து கொள்வார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு பல கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. எனவே கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் தலைமையில் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அத்துடன் மாவட்ட நிர்வாகத்தினரும் சென்று மலர் தூவி மரியாதை செய்தனர்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More