IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு! பொதுமக்கள் அதிருப்தி

Get real time updates directly on you device, subscribe now.

நடந்து முடிந்த சட்டசபை தொடரில் பால் விலை உயர்த்தப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று பால் விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி பசும்பால் கொள்முதல் விலை தற்போது லிட்டர் ரூ.28 ஆக உள்ளது. இது தற்போது ரூ.4 உயர்த்தப்பட்டு 32 ஆகவும், எருமைப்பால் ரூ.35 லிருந்து ரூ.6 உயர்த்தி ரூ. 41 ஆக்கப்பட்டுள்ளது. இதேபோல விற்பனை விலையும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது.

கொள்முதல் விலை உயர்வுக்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கும் அதேவேளையில், விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்த பட்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader