IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆவாரம்பூ காய்கறி ஊத்தாப்பம்

Get real time updates directly on you device, subscribe now.

 

தேவையான பொருட்கள் :

ஆவாரம் பூ – ஒரு கப், தோசை மாவு – அரை கிலோ, நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், துருவிய கோஸ், கேரட் – ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு – அரை கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை – அரைகப், பச்சை மிளகாய் – 4 , மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க :

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – சிறிதளவு.

செய்முறை :

தோசை மாவில் உப்பு, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்க வேண்டும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் முளைகட்டிய பச்சைப் பயிறு, கோஸ், கேரட், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி தோசை மாவில் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பின்பு தோசை தவாவில் கொஞ்சம் எண்ணெய்விட்டு ஆவாரம்பூவை வதக்கவும். இதை தோசை மாவுக் கலவையில் சேர்க்கவும். தோசை தவாவில் மாவை சிறிது கனமாக ஊற்றி, எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு ஊத்தப்பமாக எடுக்கவும். தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

#aavaram #poo #veg #dosa

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader