AA மற்றும் AAA இரண்டு பேட்டரிக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

Get real time updates directly on you device, subscribe now.

நாம் அனைவரும் வீட்டினுள் உள்ள கடிகாரத்தின் பேட்டரியை மாற்றும் போது ஒரு விஷயத்தை கவனித்திருப்போம். கடிகாரத்தின் பேட்டரி ஒரு சைசில் இருந்திருக்கும். அதே போல் டார்ச்சில் உள்ள பேட்டரி ஒரு சைசில் இருந்திருக்கும். இந்த இரண்டு பேட்டரிக்கும் உள்ள அளவு மற்றும் திறனைப்பற்றித்தான் அறிய உள்ளோம்.

AA பேட்டரி என்றும் டார்ச்சில் உள்ளது AAA பேட்டரி என்றும் கடிகாரத்தில் உள்ளது. இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் முதலில் சைஸ் தான். AAA பேட்டரி AA பேட்டரியை விட சிறியதாக இருக்கும். அதேபோல AA ஸ்லாட்டில் AAA பேட்டரியை பொருத்தும் அடாப்டர்களை பயன்படுத்த முடியும். அதுவே AAA ஸ்லாட்டில் AA பேட்டரியை பயன்படுத்த முடியாது.

கொள்திறன் அதாவது கெபாசிட்டி பொருத்தமாட்டில், AA – 600 – 2800 milli amphere hour மற்றும் AAA- 400–1200 milli amphere hour பவரையும் கொண்டிருக்கும். AA பேட்டரிகளின் விலை AAA விட சற்று கூடுதலாக இருக்கும்.

எங்கெல்லாம் அதிக ஆற்றல் அடர்த்தி(energy density) தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் AA பேட்டரிகளை பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, டிஜிட்டல் கேமரா, டாய்ஸ், ரேடியோ போன்றவற்றில் இவை பயன்படும். இவை பெரும்பாலும் பேட்டரி திறன் தீர்ந்துவிட்டாலும் மீண்டும் சார்ஜ் செய்து கொள்ளும்படி இருக்கும்.

அதுவே AAA பேட்டரி என்றால் ஆற்றல் அடர்த்தி குறைவாக தேவைப்படும் கடிகாரம், ரிமோட்டுகளில் பயன்படுத்தப்படும். இவற்றை மீண்டும் சார்ஜ் செய்யமுடியாது. மின்திறன் தீர்ந்துவிட்டால் தூக்கி ஏறிய வேண்டியது தான்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More